பயன்பாட்டிற்கு வந்த டிரான்ஸ்பார்மர்


பயன்பாட்டிற்கு வந்த டிரான்ஸ்பார்மர்
x

புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே குரண்டி கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் அந்த கிராமமக்கள் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைத்து மின்தடையை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர் சேகர், ஒன்றிய செயலாளர் செல்லம், பேரூராட்சித்தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்கத்தமிழ்வாணன், குரண்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சரஸ்வதி பாண்டியராஜன், சங்கரேஸ்வரன், விவசாய ஆத்மா குழு தலைவர் கந்தசாமி, காரியாபட்டி ஒன்றிய மாணவரணி செயலாளர் வி. நாங்கூர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story