பள்ளத்தில் கார் கவிழ்ந்து திருநங்கை பலி


பள்ளத்தில் கார் கவிழ்ந்து திருநங்கை பலி
x

பள்ளத்தில் கார் கவிழ்ந்து திருநங்கை உயிரிழந்தார்.

பெரம்பலூர்

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் முஸ்லிம் தெருவை சேர்ந்த நாசர் பாஷாவின் மகன் அகமது(வயது 22). அதே தெருவை சேர்ந்த அப்பாசின் மகன் சுதீப்(19). இவர்கள் 2 பேரும் பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர் பந்தல் கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரெமோ(35) என்ற திருநங்கையுடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு காரில் சென்றனர்.மங்களமேட்டை அடுத்துள்ள தேவையூர் பிரிவு ரோடு அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் திருநங்கை ரெமோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரெமோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 2 பேரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story