பள்ளி சுவர்களில் ஓவியங்கள் தீட்டி அசத்தும் திருநங்கைகள்; பொதுமக்கள் பாராட்டு


பள்ளி சுவர்களில் ஓவியங்கள் தீட்டி அசத்தும் திருநங்கைகள்; பொதுமக்கள் பாராட்டு
x

பள்ளி சுவர்களில் ஓவியம் வரையும் பணியை ‘திருநங்கை தூரிகை குழு’ என்ற குழுவில் உள்ள திருநங்கைகள் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் சுவரில் கலை பண்பாட்டினை ஓவியமாக வரைந்தனர்.

சென்னை

எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளியில் படித்த பழைய மாணவர்கள், மற்றும் எண்ணூர் மக்கள் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் இணைந்து எண்ணூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வெளிப்புற சுவற்றை வர்ணம் தீட்டி அழகு படுத்த முடிவு செய்தனர்.

இதையடுத்து, சுவரில் ஓவியம் வரையும் பணியை 'திருநங்கை தூரிகை குழு' என்ற குழுவில் உள்ள திருநங்கைகளிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து திருநங்கைகள் ஸ்மித்தா அபிமுக்தா, வர்ஷா, காஞ்சனா, ஆகியோர் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் சுவரில் கலை பண்பாட்டினை ஓவியமாக வரைந்து திருநங்கைகள் அசத்தி வருகின்றனர்.

இது குறித்து திருநங்கை அபிமுக்தா கூறும் போது,

எண்ணூர் மக்கள் நல சங்கத்தினர் மூலம் எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. சமூகத்தில் திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள் அல்லது யாசகம் பெருபவர்கள் என்ற எண்ணம் பரவி உள்ளது. அதனை மாற்றும் நோக்கத்துடனேயே இவ்வாறு தாங்கள் தொடங்கிய திருநங்கை தூரிகை அமைப்பு மூலம் ஓவியங்கள் வரைவதாக கூறினார்.மேலும், பள்ளியின் வெளிப்புற சுவற்றில் தமிழர்களின் ஜல்லிக்கட்டு கலை, திருவள்ளுவர், அவ்வைபாட்டி, பாண்டியர், சேரர் சோழர், தஞ்சை பெரிய கோவில் சித்திரம், கோவில்யானை போன்ற தமிழர்களின் கலாசார இலக்கிய பண்பாடு குறித்த ஓவியங்களை சுவரில் வரைவதன் மூலம் வரும் தலைமுறையினருக்கும் நமது பாரம்பரியத்தை கொண்டு சேர்க்க முடியும் என்றும் தெரிவித்தார். திருநங்கைகள் தீட்டிய இந்த சுவர் ஓவியங்களை அவ்வழியாக செல்லகூடிய பலரும் பாராட்டி ரசித்தும் செல்கின்றனர்.


Next Story