போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை
மதுரை
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மண்டல தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் கிருஷ்ணன், மாநில துணை பொதுச்செயலாளர் தேவராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து தொழிலாளர் மாநில சம்மேளன துணைத்தலைவர் பிச்சை வாழ்த்தி பேசினார். ஓய்வு பெறும் நாள் அன்றே ஓய்வு பெற்ற தொழிலாளிகளின் பண பலன்களை வழங்க வேண்டும். 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு பணப்பலனை உடனடியாக வழங்க வேண்டும். சேமநல நிதி பிடித்தம் செய்த தொகையினை திரும்பி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story