13 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
13 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
13 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டம்
மதுரை பைபாஸ் ரோட்டில் அரசு போக்குவரத்து கழக தலைமையகம் உள்ளது. அங்கு மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யு. தொழிலாளர் சங்கத்தினர் நேற்று காலை, முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தொழிற்சங்க கொடிகளை ஏந்தி, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
போராட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
டிரைவர், கண்டக்டர்களுக்கான வார ஓய்வு ரத்து, கூடுதல் நேரம் வேலை பார்த்தால்தான் விடுப்பு என்ற நிபந்தனைகளை கைவிட்டு தேவையானவர்களுக்கு தேவையான விடுப்பை வழங்க வேண்டும். தற்போது தொழிலாளர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை அதிகப்படியானதாக உள்ளது. அந்த அதிகப்படியான தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும்.
13 கோரிக்கைகள்
கடந்த 2018-ம் ஆண்டுக்குப்பின் போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பஸ்கள் வழங்கப்படவில்லை. பழைய பஸ்களை பராமரிப்பு செய்து இயக்குவது சிரமமாக உள்ளது. எனவே தேவையான தரமான உதிரிபாகங்களை வழங்க வேண்டும். தொழில்நுட்ப பணியாளர்கள் பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். என்பன உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த முற்றுகை போராட்டத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.