பயணிகள் நிழற்குடை அடிக்கல் நாட்டு விழா; ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்பு

சாத்தான்குளம் அருகே பயணிகள் நிழற்குடை அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே சவுக்கியுரம், வாலத்தூரில் புதிய நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. விழாவுக்கு பஞ்சாயத்து தலைவி திருக்கல்யாணி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி வரவேற்றார். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பயணிகள் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டி பேசினார். இதில் சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலர் பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, மாவட்ட பிரதிநிதி சித்திரை, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆழ்வார்திருநகரி யூனியன் கருங்கடல் பஞ்சாயத்து புளியங்குளம் விலக்கு மற்றும் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் பஞ்சாயத்து சவேரியார்புரம் விலக்கு ஆகிய இடங்களில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்க ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ.5லட்சம் நிதி ஒதுக்கினார். இதையடுத்து புளியங்குளம் விலக்கு, சவேரியார்புரம் விலக்கில் நிழற்குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.