அதிக மரங்களை வளர்த்து பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்


அதிக மரங்களை வளர்த்து பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்
x

அதிக மரங்களை வளர்த்து பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

அதிக மரங்களை வளர்த்து பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாற்றங்கால்

ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் சித்தூர்வாடி ஊராட்சி மேலச்சேந்தனேந்தல் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் அலையாத்தி காடுகள் பாதுகாக்கும் திட்டத்தில் தேசிய ஊரக வளர்ச்சி உறுதி திட்டத்தின் கீழ் நாற்றங்கால்பண்ணை உருவாக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையேற்று புதிய நாற்றங்கால் பண்ணையில் விதைகள் நடவு செய்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம், சித்தூர்வாடி ஊராட்சியில் உள்ள மேலச் சேந்தனேந்தல் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நாற்றங்கால் பண்ணை அமைத்து அந்த பகுதியில் மரக்கன்றுகள் அதிகஅளவு நடவு செய்து பராமரிக்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

ஆலோசனை

இதன் மூலம் அலையாத்தி காடுகளை பாதுகாக்க வேண்டும் என்பதே ஆகும். அந்த வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் ராமேசுவரம் முதல் எஸ்.பி.பட்டினம் வரை சுமார் 52 கிலோ மீட்டர் தூரம் கடற்கரை ஒட்டிய சாலை பகுதி ஆகும்.

இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு அலையாத்தி காடுகள் உருவாக்கும் வகையில் திட்டமிட்டு தொடங்கப்பட்டு உள்ளது. எம்.எஸ்.எம். சாமிநாதன் அறக்கட்டளை மூலம் விஞ்ஞானிகளின் ஆலோசனைப்படி இங்கு உள்ள நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட உள்ளன. ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் வகையில் விதைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.

சுனாமி பேரழிவு

பொதுவாக நம்பகுதி சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த பகுதி ஆகும். இதன் மூலம் இங்கு அதிக அளவு மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும்போது சுனாமி போன்ற அபாய நிலைகளை தடுக்க திட்டம் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி கடற்கரை ஒட்டி உள்ள பகுதி என்பதால் மீன்கள் இனப்பெருக்கத்திற்கும் அதிகஅளவு வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதற்கும் சிறந்த வனப்பகுதியாகவும் அமையும்.

அலையாத்தி காடுகளை இன்றைய இளைய சமுதாயத் தினரும், பொதுமக்களும் பாதுகாத்திடும் வகையில் அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், எம்.எஸ்.எம் சாமிநாதன் அறக்கட்டளை விஞ்ஞானி முகிலன், யூனியன் ஆணையாளர் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் மலைராஜன், பாலகிருஷ்ணன், சித்தூர்வாடி ஊராட்சி தலைவர் ராணி காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story