தஞ்சை சரபோஜி கல்லூரி வளாக மரங்கள் வெட்டப்படாது


தஞ்சை சரபோஜி கல்லூரி வளாக மரங்கள் வெட்டப்படாது
x

தஞ்சை சரபோஜி கல்லூரி வளாக மரங்கள் வெட்டப்படாது என்று மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மதுரை


தஞ்சையை சேர்ந்த சங்கர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியின் மைதானத்தில் கூட்டம் நடத்தவோ, வாகன நிறுத்தமாக பயன்படுத்துவதற்கோ, மரங்களை வெட்டவோ அனுமதிக்கக்கூடாது என கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயணபிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது, அரசு வக்கீல் ஆஜராகி, தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மைதானம் அரசு நிகழ்ச்சிகளை நடத்த மட்டுமே பயன்படுத்தப்படும். மைதானம் சேதப்படுத்தப்படாது. அங்கு உள்ள மரங்கள் வெட்டப்படாது என உறுதி அளித்தார். இதைபதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story