சுள்ளிபாளையம் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்
நாமக்கல்
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள சுள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் மாசு இல்லா தீபாவளி மற்றும் விபத்து இல்லா தீபாவளி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளரும், பட்டதாரி ஆசிரியருமான செந்தில் மாசு இல்லா தீபாவளி தொடர்பான உறுதிமொழியை வாசித்தார். இதனை மாணவ-மாணவிகள் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்று கொண்டனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு ஓசோன் பாதுகாப்பு குறித்து விளக்கப்பட்டதுடன், அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும் மரக்கன்றுகளை பாதுகாத்து வளர்க்க அறிவுறுத்தப்பட்டது.
Next Story