திருச்செங்கோடு அருகே கார், பழக்கடை மீது மரம் முறிந்து விழுந்தது-மூதாட்டி உயிர் தப்பினார்

நாமக்கல்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே உள்ள குமரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 40). இவருடைய வீட்டின் அருகே பழமையான மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் அடியில் பாப்பா (60) என்கிற மூதாட்டி பழக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று அந்த மரத்தின் நிழலில் அமுதா தனது காரை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது திடீரென அந்த மரம் முறிந்து கார் மற்றும் பழக்கடை மீது விழுந்தது. இதனால் கார், பழக்கடை மற்றும் அங்கிருந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது. மூதாட்டி பாப்பா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மரத்தை கரையான் அரித்து, மிகப்பெரிய ஓட்டையை ஏற்படுத்தியதால் மரம் முறிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மரம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு, கார், மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






