கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் சாலையில் சாய்ந்த மூங்கில் மரம்-போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
நாமக்கல்
சேந்தமங்கலம்:
கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில் இருந்து மலைக்கு 70 ஊசி கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இந்தநிலையில் நேற்று காலை 3-வது கொண்டை ஊசி வளைவில் திடீரென மூங்கில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சாலையில் சாய்ந்து கிடந்த மூங்கிலை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். இதையடுத்து ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
Next Story