குன்னாங்கல்பாளையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா


குன்னாங்கல்பாளையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
x
திருப்பூர்


ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெருகிவரும் மக்கள்தொகையாலும், தொழிற்சாலைகளின் கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கூடிவரும் வெயிலின் தாக்கமும், திடீரென்று பெய்யும் மழையும், அதனால் ஏற்படும் பெருவெள்ளமும் இயற்கையில் ஏதோ பெரும் மாற்றம் ஏற்படும் என்பதை சூசகமாக உணர்த்துகின்றன. நாம் சுற்றுச்சூழலை காப்பதற்கு முதன்மையாக செய்ய வேண்டியது மக்கள் தொகை கட்டுப்படுத்த வேண்டும். உலக வெப்பமயமாதல் என்னும் பிரச்சினையால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயரும் என்று கூறப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தண்ணீர் பஞ்சமும் இந்தியாவில் அதிக இடங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளன.சுற்றுச்சூழலைக் காக்க உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் குறைந்தது 5 மரக்கன்றுகளையாவது நட வேண்டும்.

அந்த வகையில் திருப்பூர் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு வழிநடத்தலின்படி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் அன்னதானம் வழங்கும் விழா கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல் பாளையத்தில் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பரம்பொருள் அறக்கட்டளை அறங்காவலர் சசிகுமார் மற்றும் கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், 9-வது வார்டு உறுப்பினர் உமா மகேஷ்வரி, பல்லடம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. இளைஞர் அணி துணைச் செயலாளர் கோவிந்தராஜ், அவரப்பாளையம் பாலு, குன்னாங்கல்பாளையம் முருகசாமி, ஈஸ்வரன், திருமுருகன் டெக்ஸ் குமார், விஜயகுமார், வழக்கறிஞர் மகேஷ் மற்றும் அறக்கட்டளையின் தன்னார்வலர்களும், பொதுமக்களுக்கும் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story