மடத்துக்குளம் அருகே அனுமதியில்லாமல் வெட்டப்பட்ட மரத்தின் கிளைகள் மின் கம்பியின் மீது விழுந்ததால் மின் கம்பம் உடைந்தது.
மடத்துக்குளம் அருகே அனுமதியில்லாமல் வெட்டப்பட்ட மரத்தின் கிளைகள் மின் கம்பியின் மீது விழுந்ததால் மின் கம்பம் உடைந்தது.
போடிப்பட்டி,
மடத்துக்குளம் அருகே அனுமதியில்லாமல் வெட்டப்பட்ட மரத்தின் கிளைகள் மின் கம்பியின் மீது விழுந்ததால் மின் கம்பம் உடைந்தது.
உடைந்த மின் கம்பம்
மடத்துக்குளத்தையடுத்த நரசிங்காபுரம் பகுதியில் தனியார் இடத்தில் கட்டுமானப் பணிகளுக்கு இடையூறாக இருந்த மரத்தை வெட்டும் பணிகள் நடைபெற்றது. பிரம்மாண்டமாக வளர்ந்திருந்த வேப்ப மரத்தின் கிளைகளை மின்சார வாள் மூலம் அறுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, வெட்டப்பட்ட பெரிய மரக்கிளை ஒன்று அருகில் சென்ற மின்சாரக் கம்பிகள் மீது விழுந்தது. கிளையின் எடை அதிகமாக இருந்ததால், பாரம் தாங்காமல் அருகிலுள்ள மின் கம்பம் உடைந்து நரசிங்காபுரத்திலிருந்து கருப்புசாமி புதூர் செல்லும் சாலையின் குறுக்கே விழுந்தது. மேலும் சாலை ஓரத்திலிருந்த 2 மின் கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தது. இதனையடுத்து மரத்தை வெட்டும் பணிகள் நிறுத்தப்பட்டது.
மின் கம்பம் விழுந்த போது சாலையில் யாரும் செல்லாததாலும், மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்ததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. . எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து என்ற வகையில் சேதமடைந்த மின் கம்பங்களுக்கான செலவினங்களை மின்வாரியத்துக்கு செலுத்த சம்பந்தப்பட்ட நபர் ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
சீரமைக்கும் பணி
இதனைத் தொடர்ந்து மின்வாரியத்தினருக்கு தகவல் தெரிவித்து உடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.மேலும் மரங்களை வெட்டும்போது உரிய அனுமதி பெற்று பாதுகாப்பான முறையில் வெட்ட வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் வலியுறுத்தினர்.