ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x

வால்பாறையில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த காற்றுடன் மழை

வால்பாறையில் கடந்த ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் மழை பெய்தது. அதைத்தொடர்ந்து கோடை மழை காரணமாக சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 102 அடியை தாண்டியது.

இந்த நிலையில் வால்பாறை வட்டார பகுதி முழுவதும் நேற்று முன்தினம் முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. இதனால் ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து தொடங்கி விட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் வால்பாறை- சோலையாறு அணை செல்லும் ரோடு வரட்டுப்பாறை எஸ்டேட் காபி தோட்டத்தில் இருந்த பெரிய காட்டு மரம் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதன் காரணமாக அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்த தகவலின் பேரில் வரட்டுப்பாறை எஸ்டேட் நிர்வாக தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் 2 மணி நேரத்திற்கு பிறகு போக்கு வரத்து சரியானது.

இன்னும் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும். இதனால் சோலையாறு அணை விரைவில் தனது முழு கொள்ளளவான 160 அடியை எட்டும். அது போன்ற நிலையில் சோலையார் மின்நிலையங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்று தெரிகிறது.


Next Story