2 இடங்களில் மரம் விழுந்தது


2 இடங்களில் மரம் விழுந்தது
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் பலத்த மழையால் 2 இடங்களில் மரம் விழுந்தது. இதனால் மின்கம்பங்கள் உடைந்ததால் மின்தடை ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையில் பலத்த மழையால் 2 இடங்களில் மரம் விழுந்தது. இதனால் மின்கம்பங்கள் உடைந்ததால் மின்தடை ஏற்பட்டது.

பலத்த மழை

ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய பலத்த மழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக ஆனைமலை பேரூராட்சி 12-வது வார்டு மயானக்கரை சாலையில் தென்னை மரம் சாய்ந்து விழுந்தது. அது அருகில் இருந்த 2 மின்கம்பங்கள் மீதும் விழுந்ததால், மின்கம்பிகள் அறுந்து மின் வினியோகம் தடைபட்டது. மேலும் மின்கம்பங்களும் உடைந்து விழுந்தது. இது தவிர அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை அகற்றினர். தொடர்ந்து போக்குவரத்து சீரானது. மேலும் மின்கம்பங்களை மாற்றி மின்தடையை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

வீட்டின் மீது விழுந்தது

இதேபோன்று சரவண விநாயகர் கோவில் வீதியில் மரம் சாய்ந்து, அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்தது. இதில் வீடு சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் தப்பினர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story