அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா


அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
x

அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

கரூர்

பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கோபு தலைமை தாங்கினார். மாவட்ட வனத்துறையுடன் இணைந்து மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி மரக்கன்றுகளை நட்டுவைத்து மாணவர்களுக்கு மரம் வளர்ப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் ஆண்டியப்பன் செய்திருந்தார்.


Next Story