அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா


அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
x
தினத்தந்தி 6 Oct 2023 7:00 PM GMT (Updated: 6 Oct 2023 7:00 PM GMT)

அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

கோயம்புத்தூர்
பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட நிகழ்ச்சி நிறைவு விழா ஏ.பி.டி. சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை தாங்கினார். ஏ.பி.டி. பள்ளி தலைமை ஆசிரியை ஷாலினி முன்னிலை வகித்தார். விழாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளியின் என்.சி.சி. மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகளை அகற்றியும், வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் தனலட்சுமி, உறுப்பினர்கள் வெள்ளை நடராஜ், சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் முகமது காஜாமைதீன் நன்றி கூறினார்.


Next Story