வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா


வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரம் பஞ்சாயத்து வளாகத்தில் பசுமை தமிழக தினத்தை முன்னிட்டு நெல்லை கோட்ட தமிழ்நாடு வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வனச்சரக அலுவலர் முருகன் தலைமை தாங்கினார். நெல்லை கோட்ட வன அலுவலர் அன்பு முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் வனச்சரக அலுவலர் ராஜகோபாலன் வரவேற்றார். தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற பேரணியை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார், சங்கரன்கோவில் யூனியன் தலைவர் லாலா சங்கரபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் மதிமாரி முத்து, ராமநாதபுரம் பஞ்சாயத்து தலைவர் கணேசன், துணைத் தலைவர் சங்கரலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்கரன்கோவில் வனவர் பிரவீன் நன்றி கூறினார்.


Next Story