உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரி மரக்கன்று நட்டு பொதுமக்கள் போராட்டம்; திட்டக்குடியில் பரபரப்பு


உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரி மரக்கன்று நட்டு பொதுமக்கள் போராட்டம்; திட்டக்குடியில் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Jun 2023 1:32 AM IST (Updated: 22 Jun 2023 10:18 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடியில் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரி பொதுமக்கள் மரக்கன்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

திட்டக்குடி,

திட்டக்குடி நகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட வண்டிக்கார தெருவில் உள்ள குழாய் உடைந்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வீணாக வழிந்தோடுகிறது. இவ்வாறு வீணாகும் குடிநீர் வழியில் குட்டையாக தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடம் பள்ளமாக இருப்பதால் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க உடைந்த குழாயை சீரமைக்க கோரி திட்டக்குடி நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று அப்பகுதி மக்கள் உடைந்த குழாயை சீரமைக்க கோரி உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மரக்கன்றை நட்டு வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story