பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் சூறாவளி காற்றுக்கு மரங்கள் சாய்ந்தன


பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் சூறாவளி காற்றுக்கு மரங்கள் சாய்ந்தன
x

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் சூறாவளி காற்றுக்கு மரங்கள் சாய்ந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் மழை எப்போது பொழியும் என்று எதிர்ப்பார்ப்பில் இருந்து கொண்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை பெரம்பலூர் அருகே எசனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய சூறாவளி காற்றுடன் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றுக்கு பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் எசனை பகுதியில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மரங்களில், சில மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் எசனை ஊராட்சி நிர்வாகத்தினர் போலீசார் உதவியுடன் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். பெரம்பலூரில் லேசான மழை பெய்தது.


Next Story