மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்தன

பந்தலூரில் பலத்த மழையால் மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்தன.
பந்தலூர்
பந்தலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பந்தலூர், கொளப்பள்ளி, ஏலமன்னா, கோட்டப்பாடி, மழவன் சேரம்பாடி, அய்யன்கொல்லி, எருமாடு, தாளூர், பிதிர்காடு, பொன்னானி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பொன்னானி, சேரம்பாடி, சோலாடி ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கொளப்பள்ளி ஏலமன்னா பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக ஏலமன்னா, நெல்லியாளம் டேன்டீ உள்ளிட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. தொடர் மின்தடையால் தேயிலை தொழிற்சாலைகள் இயங்கவில்லை. அய்யன்கொல்லி உதவி மின் பொறியாளர் தமிழரசன் மற்றும் ஊழியர்கள் மரங்களை அகற்றி மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மதியம் 2 மணிக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டது.






