போக்குவரத்துக்கு இடையூறான மரங்களை அகற்ற வேண்டும்


போக்குவரத்துக்கு இடையூறான மரங்களை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்காடு அருகே போக்குவரத்துக்கு இடையூறான மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே மங்கை மடம் -திருநகரி சாலை கடலோர கிராமங்களான திருமுல்லைவாசல், புதுப்பட்டினம், பழையாறு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்வதற்கான முக்கிய வழித்தடமாகும். இந்த சாலையில் நெப்பத்தூர் பகுதியில் இருபுறமும் சாலையை மறைத்து மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதேபோல் மங்கை மடம்-பெருந்தோட்டம் சாலையில் எம்பாவை நடுநிலைப்பள்ளி அருகே மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இந்த மரங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story