பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம், 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு பழங்குடியினர் இன மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக கடந்த 20-ந் தேதி அன்று முதல் இணையதளம் (https://tnadtwscholarship.tn.gov.in) திறக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகை கல்லூரிகளில் படிக்கும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை இணையவழியில் விண்ணப்பிக்கப்பட்டதை சம்மந்தப்பட்ட கல்லூரி பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அதே போன்று மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் கட்டாயம் இணையவழி மூலம் வருமான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மாணாக்கரின் வங்கி கணக்கில் இடம் பெற்றுள்ள பெயர், அம்மாணாக்கரின் பள்ளி சான்றிதழ்களில் உள்ளவாறு இடம் பெற்றுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே அனைத்து மாணாக்கர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story