பழங்குடியின வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


பழங்குடியின வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பழங்குடியின வாலிபர் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பழங்குடியின வாலிபர் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாலிபர்

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள சின்ன மயிலாறு பகுதியை சேர்ந்தவர் அரிஹரன். வனத்துறையில் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி தெய்வானை. இவர்களுடைய மகன் அரவிந்த் (வயது 28). இன்னும் திருமணமாகவில்லை.

இந்த நிலையில் நேற்று மதியம் தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் பாபநாசத்துக்கு சென்று காய்கறிகள் வாங்கிக்கொண்டு சின்ன மயிலாறுக்கு திரும்பி சென்றுள்ளார். செல்லும் வழியில் காரையார் பகுதியை சேர்ந்த மற்றொருவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது அரவிந்த் மோட்டார் சைக்கிள் மோதியது.

தூக்கில் பிணமாக தொங்கினார்

இதில் தெய்வானைக்கு காயம் ஏற்படவே அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையே அரவிந்த் திடீரென மாயமானார். தொடர்ந்து அரவிந்த் உறவினர்கள் வனப்பகுதியில் தேடிப் பார்த்த நிலையில் யானைக்காடு என்ற பகுதி அருகே உள்ள புளியமரத்தில் லுங்கியில் அவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அரவிந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story