பழங்குடியினர் பாரம்பரிய கலை விழாவை நடத்த நிதியை விடுவிக்க வேண்டும்


பழங்குடியினர் பாரம்பரிய கலை விழாவை நடத்த நிதியை விடுவிக்க வேண்டும்
x

பழங்குடியினர் பாரம்பரிய கலை விழாவை நடத்த நிதியை விடுவிக்க வேண்டும் என இருளர் பழங்குடியினர் அமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருளர் பழங்குடியினர் அமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டரிடம் ஒரு கேரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், இருளர் சமுதாயம் மற்றும் பழங்குடியினர் ஆராய்ச்சி மையமும் இணைந்து வருகிற ஏப்ரல் மாதம் 21, 22 அல்லது 28, 29-ந் தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியில் பழங்குடியினர் பாரம்பரிய கலை விழாவை ஜெயங்கொண்டத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்விழாவில் பல்துறை அரசு உயர் அலுவலர்கள், பழங்குடியின பாரம்பரிய கலை குழுக்கள் மற்றும் பழங்குடியின சமுதாய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்விழாவிற்கான செலவீன முன் தொகையாக பழங்குடியினர் ஆராய்ச்சி மைய அலுவலகம் மூலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கணக்கில் 23.11.2017 முதல் ரூ.1 லட்சம் வழங்கி உள்ளார்கள். எனவே மேற்கண்ட தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியில் கலை விழா நடத்தவும், அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் நிகழ்ச்சி ஏற்பாடு செலவினர்களுக்காக ரூ.1 லட்சம் நிதியை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம், என கூறியுள்ளனர்.


Next Story