பணியின்போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி


பணியின்போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில், பணியின்போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில், பணியின்போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தீ தொண்டு நாள்

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி தீ தொண்டு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதில், தீயணைப்பு துறையில் மீட்பு பணியின் போது உயிரிழந்த வீரர்களின் நினைவாக அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.

இதேபோல், நேற்று காலை கோவை ரெயில் நிலையம் ரோட்டில் உள்ள தெற்கு தீயணைப்பு நிலையத்தில், பணியின்போது உயிர் நீத்தாருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை மண்டல இணை இயக்குனர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். அப்போது அவர் தீயணைப்பு நிலையத்தின் வளாகத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.

விழிப்புணர்வு

மேலும் அனைத்து தீயணைப்பு வீரர்களும் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் அண்ணாதுரை, உதவி அலுவலர்கள் அழகர்சாமி, முருகன், ராமச்சந்திரன், தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சிவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து நேற்று முதல் வருகிற 20-ந் தேதி வரை தீ தொண்டு நாள் அனுசரிக்கப்படுவதால் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட உள்ளது.


Next Story