திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் கள பயிற்சி
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் திருச்சி வேளாண்மை கல்லூரி மாணவிகள் கள பயிற்சி பெற்றனர்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் திருச்சி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளம் அறிவியல் வேளாண்மை இறுதி ஆண்டு மாணவர்கள் 10 பேர் தங்கள் வேளாண் களப்பயிற்சியை தொடங்கினர்.முதற்கட்டமாக வேளாண் அறிவியல் நிலையத்தில் (நீடாமங்கலம்) விவசாயிகளுக்கான சொட்டு நீர்ப்பாசனத் திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினர். பின்னர் வேளாண் அறிவியல் நிலையத்தில் அங்கக வேளாண்மை பயிற்சியில் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பூச்சி விரட்டி, பஞ்சகவ்யா, 3-ஜி கரைசல், முட்டை அமிலம், மீன் அமிலம், ஐந்திலைக் கரைசல் ஆகியவற்றின் செய்முறைகளை செய்து காட்டி அதன் பயன்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதை தொடர்ந்து வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திற்குச் சென்று வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமாரை சந்தித்து பயிர் உற்பத்தித்திறன் மற்றும் பயிரிடும் முறை குறித்து அறிந்து கொண்டனர்.