திருச்சி மத்திய பஸ் நிலைய ஒப்பந்ததாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
திருச்சி மத்திய பஸ் நிலைய ஒப்பந்ததாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்சி
திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தினமும் ஒவ்வொரு வார்டாக சென்று தூய்மைப்பணிகள் குறித்தும், சுகாதாரம் குறித்தும் ஆய்வு நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் தஞ்சை பஸ்கள் நிற்கும் பகுதியில் உள்ள கட்டண கழிவறை மற்றும் கோவை பஸ்கள் நிற்கும் பகுதியில் உள்ள கட்டண கழிவறை சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டது. இதையடுத்து அந்த கட்டணக் கழிவறை ஒப்பந்ததாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த அபராத தொகையை ஒப்பந்ததாரர் உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்தினார். மேலும், அங்கு பஸ் கண்டக்டர் ஒருவர் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் எச்சில் துப்பினார். அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story