திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பைகளால் பரபரப்பு


திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த  பைகளால் பரபரப்பு
x

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பைகளால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அந்த பைகளை சோதனை செய்தனர்.

திருச்சி

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பைகளால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அந்த பைகளை சோதனை செய்தனர்.

கேட்பாரற்று கிடந்த பைகள்

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் புதுக்கோட்டை பஸ் நிற்கும் பகுதியில் நேற்று மதியம் 12 மணி அளவில் 2 பைகள் கிடந்தன. நீண்ட நேரம் ஆகியும் அந்த பைகளை உரிமை கோரி யாரும் வரவில்லை. அங்கிருந்த பயணிகள் இந்த பைகளில் வெடிகுண்டு எதுவும் இருக்குமோ என்று அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர் மகேஷ்வரன் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

சோதனை

அப்போது அந்த பைகளை யாரும் உரிமை கோரவில்லை. பின்னர் அந்த பைகளில் வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனை செய்ய வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்வர்ட் மற்றும் போலீசார் அந்த பைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். பின்னர் அந்த பைகளில் வெடிகுண்டு இல்லை என்று உறுதிபடுத்தினர்.

மாத்திரைகள்

பின்னர் அந்த பைகளை பார்த்த போது அதில் நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரைகள், புதிய துணிகள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் பையில் விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்ததற்கான டேக் இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story