திருச்சி-திண்டுக்கல் சாலை அகலப்படுத்தும் பணி; நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் ஆய்வு
திருச்சி-திண்டுக்கல் சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் ஆய்வு நடத்தினார்.
திருச்சி
திருச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பராமரிப்பில் உள்ள சென்னை-திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்துதல், பெட்டிபாலங்கள் திரும்ப கட்டுதல், சிறுபாலங்கள் அகலப்படுத்துதல், தடுப்புச்சுவர் கட்டுதல், வடிநீர்கால்வாய் கட்டுதல் மற்றும் மையத்தடுப்பான் கட்டுதல் உள்பட ரூ.75 கோடியில் முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, திருச்சி-அரிஸ்டோ மேம்பாலம் பொன்னகர் பகுதியில் இருந்து திண்டுக்கல் சாலையில் சோழன்நகர் வரை சாலை அகலப்படுத்துதல் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வருகிறது. இந்த பணியை சென்னை நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் கோதண்டராமன்நேற்று ஆய்வு செய்தார். அப்போது திருச்சி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story