திருச்சி மாவட்ட செய்தி சிதறல்


திருச்சி மாவட்ட செய்தி சிதறல்
x

திருச்சி மாவட்ட செய்தி சிதறல்

திருச்சி

100 நாள்வேலை

சிறுகனூரை அடுத்த சனமங்கலம் அருகே உள்ள எம். ஆர்.பாளையம் மேலத்தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி அமுதா (வயது37). இவர் நேற்று காலை 100 நாள் வேலைக்காக சென்றுவிட்டார். அதன்பின் ரவி ஆடி அமாவாசையையொட்டி அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டார்.

பின்னர் அவர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை பார்த்தபோது, அதில் இருந்த 9 பவுன் தங்க நகை திருட்டு போய் இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

இரும்புகம்பியால் தாக்குதல்

*லால்குடி அபிஷேகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (52). காவலாளியான இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் சக்கரவர்த்திக்கு புள்ளம்பாடியை சேர்ந்த லட்சுமி என்று பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று லட்சுமியை சக்கரவர்த்தி சத்தம்போட்டாராம். இதை அறிந்த லட்சுமியின் மருமகன் அழகேசன் இது பற்றி கேட்டு சக்கரவர்த்திைய இரும்பு கம்பியால் தாக்கினாராம். இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகேசனை கைது செய்தனர்.

மனைவியை அரிவாளால் வெட்டி கணவர் தற்கொலை முயற்சி

*வையம்பட்டி அருகே உள்ள வளர்ந்த நகரத்தை சேர்ந்தவர் நல்லுசாமி (34). இவரது மனைவி பானுமதி (30). நேற்று தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நல்லுசாமி பானுமதியை அரிவாளால் வெட்டியதுடன் கடப்பாறையால் தாக்கினார். இதைத்தொடர்ந்து நல்லுசாமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story