திருச்சி மாவட்ட செய்தி சில வரிகளில்...


திருச்சி மாவட்ட செய்தி சில வரிகளில்...
x

திருச்சி மாவட்ட செய்தி சில வரிகளில்...

திருச்சி

ஆய்வு

*திருவெறும்பூர் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று காலை திருவெறும்பூர் பகுதியில் உள்ள பல்வேறு பஸ் நிறுத்தங்களில் நின்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் நகர பஸ்கள் முறையாக இயக்கப்படுகிறதா?

அவர்களுக்கு நிர்ணயித்துள்ள கால அட்டவணைப்படி இயக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார். விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

மின்னல் தாக்கியது

*மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதேபோல் காளவாய்ப்பட்டியிலும் இடி, மின்னலுடன் கன மழை பெய்ததில் சின்னதுரை என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகள், ஒரு பசு மாடு மின்னல் தாக்கி செத்தன.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

*திருச்சி காந்திமார்க்கெட் இ.பி.ரோடு வாழைக்காய் மண்டி பகுதியில் காரில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வந்ததாக லால்குடி அருகே உள்ள பூவாளூர் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் (31) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து உள்ளனர்.

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

*மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்ஊழியர் மத்திய தொழிற்சங்கத்தினர் நேற்று திருச்சி தென்னூரில் தலைமை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் செல்வராஜ், பொருளாளர் பழனியாண்டி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

32 மனுக்களுக்கு தீர்வு

*திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார் தலைமையில் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.இதையடுத்து மனுதாரர்கள் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு நேரடியாக விசாரணை மேற்கொண்டனர். இதில் 32 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஸ்டூடியோவில் திருட்டு

*முசிறி துறையூர் ரோட்டில் ஸ்டூடியோ நடத்தி வருவர் புதுப்பட்டி காலனியை சேர்ந்த கந்தசாமி (43). இவரது ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து உள்ள புகுந்த மர்ம நபர்கள் ரூ.6 ஆயிரம், கேமரா உள்ளிட்ட பல பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கல்யாண உற்சவம்

* திருச்சி பெரியகடைவீதி பகுதியில் உள்ள ஸ்ரீவரதவேங்கடேசப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

ஏர் கலப்பைகளுடன் போராட்டம்

*தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் மேகதாது வில் அணை கட்டும் கர்நாடகா அரசை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று போலி ஏர் கலப்பைகளுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

எம்.எல்.ஏ.வை அழைக்கவில்லை என குற்றச்சாட்டு

*துறையூர் அரசு உதவி பெறும்மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், துறையூர் வட்டார அளவிலான குறுவட்ட தடகளப் போட்டிகள் நேற்று நடைபெற்றது நிகழ்ச்சிக்குமாவட்ட கல்வி அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு துறையூர் எம்.எல்.ஏ.மற்றும் நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை அழைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.செய்தி சில வரிகளில்...


Next Story