ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு


ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகர், சிதம்பரம் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்திற்கு நேற்று திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மனிஷ் அகர்வால் சிறப்பு ரயில் மூலம் வந்தார். பின்னர் அவர் அங்கு பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை முறையாக செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொது நல அமைப்புபினர் கோரிக்கை மனு ஒன்றை திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மனிஷ் அகர்வாலிடம் அளித்தனர்.

அதில் இந்த வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் கடலூர் துறைமுகம் மற்றும் திருப்பாதிரிபுலியூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. பின்னர் நிருபர்களுக்கு மனிஷ் அகர்வால் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனாவிற்கு பின்பு ரெயில்வே கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சில ரெயில்கள் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

மேலும் நிர்வாக பிரச்சினைகளுக்காக கடலூர் முதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையங்களில் சில ரெயில்கள் நின்று செல்வதில்லை. ஒரு சில ரெயில்கள் அதிவிரைவு ரெயில்களாக உள்ளதால் அவைகள் நிற்பதில்லை. இது பற்றி ரெயில்வே அமைச்சகம் மற்றும் ரெயில்வே போர்டு தான் முடிவு செய்ய முடியும். இருப்பினும் அனைத்து ரெயில்களும் நின்று செல்வது தொடர்பாக வந்துள்ள மனுக்கள் மீது பரிசீலனை செய்து, அதன் மீது நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்யப்படும் என்றார். இந்த ஆய்வின் போது ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

சிதம்பரம்

முன்னதாக திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மனிஷ் அகர்வால் சிதம்பரம் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் சிதம்பரம் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகளை சரியான முறையில் செய்து கொடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்ற அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது சிதம்பரம் இருப்பு பாதை சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன், ரெயில்வே மேலாளர் ஆனந்தகுமார், வர்த்தக சங்கம், சிதம்பரம் நகை கடை வியாபாரிகள் சங்கத்தினர் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story