திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருச்சி

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான கோகுல இந்திரா பேசும்போது, நாடாளுமன்றத்தேர்தல், சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி பூத் கமிட்டி, மகளிர் குழு, பாசறை அமைப்பது ஒரு அடித்தளமாக அமையவுள்ளது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றார். கூட்டத்தில் பகுதி செயலாளர்கள், பூபதி, விஜி, முன்னாள் துணை மேயர் மரியம் ஆசிக், இப்ராம்ஷா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story