தடகள போட்டியில் திருச்சி எஸ்.டி.ஏ.டி. அணி சாம்பியன்


தடகள போட்டியில் திருச்சி எஸ்.டி.ஏ.டி. அணி சாம்பியன்
x

தடகள போட்டியில் திருச்சி எஸ்.டி.ஏ.டி. அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

திருச்சி

திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் இளையோருக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 3 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகளின் முடிவில் பெண்கள் பிரிவில் 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 7 வெண்கலப்பதக்கங்களை பெற்ற முசிறி அமலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 5 தங்கம், ஒரு வெள்ளி வென்ற ஆர்.எஸ்.ஏ. அணி 2-வது இடத்தை பிடித்தது. இதுபோல் ஆண்கள் பிரிவில் 15 தங்கம், 15 வெள்ளி, 7 வெண்கலப்பதக்கங்களை பெற்ற திருச்சி எஸ்.டி.ஏ.டி. அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 8 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலப்பதக்கத்துடன் ஆர்.எஸ்.ஏ. அணி 2-வது இடத்தை பெற்றது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் திருச்சி பட்டாலியன் காமண்டென்ட் ஆனந்தன், வீரசக்தி ஆகியோர் கலந்து கொண்டு வீரர்-வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். மேலும் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே தலா ரூ.300, 200,100 என ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜு, செய்தி தொடர்பாளர் நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story