2 தங்கப்பதக்கங்களை வென்று திருச்சி மாணவி சாதனை


2 தங்கப்பதக்கங்களை வென்று திருச்சி மாணவி சாதனை
x

2 தங்கப்பதக்கங்களை வென்று திருச்சி மாணவி சாதனை படைத்தார்.

திருச்சி

சர்வதேச அளவிலான கராத்தே போட்டி கோவையில் நடந்தது. இதில் இந்தியா, மலேசியா, இலங்கை, ஈரான், இந்தோனேசியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் இந்தியா சார்பில் திருச்சியில் இருந்து கராத்தே மாஸ்டர் சங்கர் தலைமையில் 25 பேர் கலந்து கொண்டனர். திருச்சியில் தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் கராத்தே லீனா என்ற மாணவி 8 வயதிற்கு உட்பட்ட கட்டா பிரிவில் கலந்து கொண்டு, சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதுபோல் குமித்தே பிரிவிலும் அவர் முதலிடத்தை பிடித்தார். இந்நிலையில் 2 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்து திருச்சி திரும்பிய மாணவி கராத்தே லீனாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story