சாலை மறியலுக்கு முயன்ற 68 பேர் கைது


சாலை மறியலுக்கு முயன்ற 68 பேர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புளியரையில் சாலை மறியலுக்கு முயன்ற 68 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

செங்கோட்டை:

தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை அருகே உள்ள புளியரை வழியாக கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தி செல்வதாகவும், இதை தடுக்க வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து நேற்று புளியரை மோட்டார் வாகன சோதனை சாவடி முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் தலைமையில் இயற்கை வள பாதுகாப்பு சங்க பொது மேலாளர் ஜமீன், பல்வேறு சமூக அமைப்புகள், பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட செங்ேகாட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையிலான போலீசார், மறியல் செய்ய முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 68 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கட்டளை குடியிருப்பு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது, அவர்கள் தங்களை சாலை மறியல் செய்வதற்கு முன்பாகவே கைது செய்ததாக கூறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கு இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story