கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,600 கிலோ ரேஷன்அரிசி சிக்கியது


கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,600 கிலோ ரேஷன்அரிசி சிக்கியது
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே லோடு ஆட்டோவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,600 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

கயத்தாறு அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.

சோதனை

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் பாரத் லிங்கம் தலைமையில் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கோவில்பட்டி பகுதியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற லோடு ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

1600 கிலோ

அப்போது அதில் தலா 40 கிலோ எடை கொண்ட 40 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் மொத்தம் 1600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக போலீசார் ரேஷன் அரிசி மற்றும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். லோடு ஆட்டோவை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் திருமூலநகரை சேர்ந்த ஜா.அருள்ராஜ் என்ற ராமு (வயது 46) என்பரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கோவில்பட்டி பகுதியில் வாங்கிய இந்த ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக தூத்துக்குடி குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான கன்னியாகுமரி மாவட்டம் கவியலூர் சரல்விளையை சேர்ந்த பா.விஜயகுமார், கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரை பாரசுவைக்கல் பகுதியை சேர்ந்த த.சரத் என்ற மகேஷ் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.


Next Story