சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரவை பணி குறித்த முத்தரப்பு கூட்டம்


சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரவை பணி குறித்த முத்தரப்பு கூட்டம்
x

கள்ளக்குறிச்சியில் சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரவை பணி குறித்த முத்தரப்பு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரவை பணி குறித்து விவசாயிகள், வெட்டுக்கூலி ஆட்கள் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் ஆகியோர்களுக்கான முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட

வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1-ன் மேலாண் இயக்குனர் கருணாநிதி, கச்சிராயப்பாளையத்தில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை 2-ன் மேலாண் இயக்குனர் அரவிந்தன், செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை

மேலாண்மை இயக்குனர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (2023-2024)-ம் ஆண்டு கரும்பு அரவை பணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

சீரான வெட்டுக்கூலி நிர்ணயம்

இதில் கரும்பு அரவை பருவம் ஆரம்பம் முதல் முடியும் வரை சீரான வெட்டுக்கூலி நிர்ணயம் செய்வது, சர்க்கரை ஆலையில் அரவை பிழித்திறனுக்கு ஏற்ப கரும்பு நடவு சாகுபடி செய்வது, அந்தந்த ஆலைப்பகுதிக்கு உட்பட்ட கரும்புகளை அந்தந்த ஆலைகளிலேயே அரவை பணிக்கு வழங்குவது, பதிவு செய்யாத கரும்புகளை அரசு அனுமதி பெற்ற இதர ஆலைகளுக்கு அனுப்புவது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பெரம்பலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரமேஷ், வேங்கூர் பன்னாரியம்மன், தனியார் சர்க்கரை ஆலை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், கரும்பு வெட்டுக்கூலி ஆட்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story