லாரி- பஸ் மோதல்; 14 பேர் காயம்
ஊத்தங்கரை அருகே லாரி- பஸ் மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் காயம் அடைந்தனர்.
ஊத்தங்கரை:-
ஊத்தங்கரை அருகே லாரி- பஸ் மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் காயம் அடைந்தனர்.
பஸ்- லாரி மோதல்
பெங்களூருவில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற அரசு பஸ், மிட்டப்பள்ளி தனியார் பள்ளி அருகே நேற்று அதிகாலை 2 மணி அளவில் வந்தது. அப்போது புதுச்சேரியில் இருந்து ஊத்தங்கரை நோக்கி வந்த லாரியும், பஸ்சும் மோதிக்கொண்டன.
இதில் பஸ், லாரியின் முன்பகுதி சேதம் அடைந்தன. இந்த விபத்தில் அதிகாலை நேரம் என்பதால் பஸ்சில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிலர் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்கு சென்றனர்.
விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் அதிகாலை நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.