கிராவல் மண் அள்ளிசென்ற லாரி, 2 டிராக்டர்கள் பறிமுதல்
கிராவல் மண் அள்ளிசென்ற லாரி, 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அரிமளம் அருகே கடையக்குடி பகுதியில் கிராவல் மண் கடத்தப்படுவதாக அரிமளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கோவிஞ்சம்பட்டி கண்மாய் பகுதியில் கிராவல் மண் அள்ளிசென்ற டிப்பர் லாரி, 2 டிராக்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில், லாரி, டிராக்டர்களில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரி, 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து கிராவல் மண் அள்ளிசென்ற டிப்பர் லாரி டிரைவர் நம்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த வீரப்பன், டிராக்டர்கள் ஓட்டி வந்த முனசந்தை மணி, கோவிஞ்சம்பட்டி சுப்பையா ஆகியோர் மீது அரிமளம் போலீசார் வழக்குப்பதிந்து வீரப்பன், மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தலைமறைவாக உள்ள சுப்பையாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.