மினிவேன் மீது லாரி மோதல்; டிரைவர் பலி
மினிவேன் மீது லாரி மோதியதில் டிரைவர் பலியானார்.
காவேரிப்பாக்கம்
மினிவேன் மீது லாரி மோதியதில் டிரைவர் பலியானார்.
காவேரிப்பாக்கம் கொண்டாபுரம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த மினிவேன் மீது லோடு லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
சென்னையில் இருந்து வேலூரை நோக்கி லாரி ஒன்று சென்றது. காவேரிப்பாக்கம் கொண்டாபுரம் பகுதியில் சென்றபோது, மெக்கானிக் கடையில் நிறுத்தி பழுது பார்த்துக்கொண்டிருந்த மினி வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் காட்பாடி பகுதியை சேர்ந்த அஸ்லாம் (வயது 42) மற்றும் மினி வேன் டிரைவர் அஸ்லாம் பாஷா (22) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
அவர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு லாரி டிரைவர் அஸ்லாம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.