லாரிகள் மோதல்; டிரைவர் படுகாயம்
திண்டிவனத்தில் லாரிகள் மோதல்; டிரைவர் படுகாயம்
திண்டிவனம்
கேரள மாநிலம் கொச்சி பகுதியில் இருந்து கியாஸ் டேங்கர் லாரி ஒன்று சென்னை கும்மிடிப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. திண்டிவனம் அருகே உள்ள கரிக்கம்பட்டு கூட்டு சாலையில் வந்தபோது பின்னால் வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி கியாஸ் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த கண்டெய்னர் லாரி டிரைவர் ராமச்சந்திரன்(63) இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கி உயிருக்கு போராடினார்.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து வந்த ஒலக்கூர் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராமச்சந்திரனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கியாஸ் டேங்கர் லாரியில் லேசான சேதம் ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.