மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; இசைக்கலைஞர் சாவு


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; இசைக்கலைஞர் சாவு
x

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இசைக்கலைஞர் பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை

ஆதனக்கோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது 38). இவர் இசை நிகழ்ச்சிகளில் இசைக்கருவியை வாசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு ஆதனக்கோட்டையிலிருந்து கல்லுக்காரன்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் பீதியடைந்த டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆதனக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story