மொபட் மீது லாரி மோதல்; தாயுடன் சென்ற சிறுமி சாவு


மொபட் மீது லாரி மோதல்; தாயுடன் சென்ற சிறுமி சாவு
x

மதுரை அருகே மொபட் மீது லாரி மோதிக்கொண்ட விபத்தில் தாயுடன் சென்ற சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

மதுரை

மதுரை,

மதுரை அருகே மங்களக்குடி விலக்கு பகத்சிங் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 41). இவருடைய மனைவியும், 9 வயது மகள் அஜிதாவும் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மூன்றுமாவடி பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த தண்ணீர் லாரி, அவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. இதில் தாயும் சிறுமியும் கீழே விழுந்தனர். படுகாயம் அடைந்த அஜிதா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் காளிதாஸ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் தனஇந்திரன் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story