மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்;வாலிபர் பரிதாப சாவு
கூடலூரில், மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கூடலூர்: கூடலூரில், மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூர் ஓ.வி.எச். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், இவரது மகன் சதீஷ்(வயது 30). இவர், கூடலூரில் உள்ள தனியார் பால் விற்பனை மையத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் சதீஷ் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டில் இருந்து கூடலூர் நகருக்கு சென்று கொண்டிருந்தார்.
மேல் கூடலூர் பள்ளிவாசல் அருகே உள்ள சாலை வளைவில் திரும்பும்போது சதீசின் மோட்டார் சைக்கிள் மீது கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்ற மினி லாரி ஒன்று மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சதீஷ் கீழே விழுந்தார். தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியின் சக்கரம் அவரது தலை மீது ஏறி இறங்கியது. இதில் தலைக்கவசம் அணிந்திருந்தும் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் செல்வராஜ் பலியானார்.
போலீசார் விசாரணை
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து கூடலூர் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பலியான சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் கல்லுப்புராவைச் சேர்ந்த சுரேந்திரா(வயது 25) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.