குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் லாரி டிரைவர் கைது


குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் லாரி டிரைவர் கைது
x

குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

குளித்தலை,

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சின்னாகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 22). லாரி டிரைவா். இவர் 17 வயதான சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக சைல்டு லைன் மூலம் கிடைத்த தகவலின் பேரில் கிருஷ்ணராயபுரம் ஊர் நல அலுவலர் துளசிமணி இந்த திருமணம் குறித்து குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story