லாரி டிரைவர், கிளீனருக்கு அடி உதை


லாரி டிரைவர், கிளீனருக்கு அடி உதை
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நிலக்கரி ஏற்றி செல்வதில் தகராறில் லாரி டிரைவர், கிளீனரை அடித்து உதைத்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி

நாசரேத் உடையார்குளத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 26). லாரி டிரைவர். இவரது லாரியில் கிளீனராக நெல்லை மாவட்டம் மாஞ்சோலையை சேர்ந்த திவாகர் (21) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கும், மற்றும் சில லாரி டிரைவர்களுக்கும் இடையே தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து புதியம்புத்தூரில் உள்ள தனியார் அனல்மின்நிலையத்துக்கு நிலக்கரி ஏற்றி செல்வதில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து துறைமுகம் ரோட்டில் உள்ள எடைநிலையத்தில் சிவக்குமார் நின்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு லாரி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த லாரி டிரைவர்கள் கோபி (22), தமிழ் மற்றும் 15 பேர் சேர்ந்து சிவக்குமார், திவாகர் ஆகியோரை தாக்கியும், சாதியை சொல்லியும் திட்டினார்களாம். இதில் காயம் அடைந்த 2 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story