லாரி டிரைவர் சிகிச்சை பலனின்றி சாவு


லாரி டிரைவர் சிகிச்சை பலனின்றி சாவு
x

விபத்தில் படுகாயம் அடைந்த லாரி டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 53), லாரி டிரைவர். இவர் கடந்த மே மாதம் 7-ந்தேதி தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் மெயின் ரோடு அருகே உள்ள பஞ்சர் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். சூரியமணல் ரேஷன் கடை அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story