அனுமதியின்றி தேக்கு மரம் ஏற்றிச்சென்ற லாரி டிரைவருக்கு ரூ.1¾ லட்சம் அபராதம்
அனுமதியின்றி தேக்கு மரம் ஏற்றிச்சென்ற லாரி டிரைவருக்கு ரூ.1¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை
அனுமதியின்றி தேக்கு மரம் ஏற்றிச்சென்ற லாரி டிரைவருக்கு ரூ.1¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலையில் அவ்வப்போது அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் பிரபு அறிவுரையின்படி, ஏலகிரி மலை வனவர் சரவணன் தலைமையில் வனப்பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது ஏலகிரி மலையில் நிலாவூர் அருகே ராயனேரி கிராமத்தில் பட்டா நிலத்தில் தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு அதனை வனத்துறையின் அனுமதியின்றி லாரியில் ஏற்றிச்செல்வதாக கிடைத்தது.
அதைத்தொடர்ந்து ஏலகிரி மலையில் இருந்து கிழே இறங்கும் போது வனத்துறை அதிகாரிகள் லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் தேக்கு மர துண்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். அனுமதியின்றி தேக்கு மரங்களை ஏற்றி சென்ற வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் விஜயகுமாருக்கு ரூ.1 லட்சத்து 75000 அபராதம் விதித்தனர்.